
அல்லு அர்ஜுனுக்கு ஆறு மாத டைம் கொடுத்த பாலகிருஷ்ணா
அப்போது அவரிடம் பேசிய பாலகிருஷ்ணா, அங்கே இருந்த திரையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் புகைப்படத்தை காட்டி இவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அல்லு அர்ஜுன், “இவர் என்னுடைய பேவரைட் நடிகர். பாலிவுட்டில் உள்ள மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். இன்னும் சொல்லப்போனால் இந்த தலைமுறையில் நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு நடிகராக இருக்கிறார். நான் அவரை ரொம்பவே ரசிக்கிறேன்” என்று கூறினார். உடனே பாலகிருஷ்ணா சற்றும் யோசிக்காமல் நீங்கள் இருவரும் இணைந்து ஒரு மல்டி ஸ்டாரர் படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என கேட்க அதற்கு அல்லு அர்ஜுன் நிச்சயமாக அது சூப்பராக தான் இருக்கும் சார் என்றார்.
உடனே பாலகிருஷ்ணா, “அப்படியானால் ரன்பீர் கபூரும், அல்லு அர்ஜுனும் ஒரு மல்டி ஸ்டாரர் படத்தில் நடிக்கப் போகிறார்கள்” என்று அங்கிருந்த ஆடியன்ஸை பார்த்து கூறியதுடன், “உங்களுக்கு ஆறு மாதம் நான் டைம் கொடுக்கிறேன். யாரும் உங்களுக்காக ஸ்கிரிப்ட் எழுதவில்லை என்றால் நானே உங்களுக்காக கதை எழுதுகிறேன்” என்றும் கூறினார். பாலகிருஷ்ணாவின் இந்த பேச்சு சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதுடன் குறிப்பாக அல்லு அர்ஜுன் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்று வருகிறது .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!