
மம்முட்டியின் தலைமையில் 40 ஜோடிகளுக்கு நடைபெற்ற மெகா திருமணம்
சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பலர் உயிரிழந்தனர். பலர் தங்கள் வீடு வாழ்வாதாரத்தை இழந்தனர். அதில் சுருதி என்கிற பெண் நிலச்சரிவால் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து தவித்தார். அப்போது அவருக்கு ஆதரவாக அவரது நண்பரான ஜென்சன் என்பவர் துணை நின்றார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இருந்தனர். ஆனால் அடுத்து வந்த சில நாட்களிலேயே ஜென்சன் ஒரு விபத்தில் சிக்கி இறந்தது சுருதிக்கு பேரிடியாக அமைந்தது.
அந்த சமயத்தில் நடிகர் மம்முட்டி சுருதிக்கு ஆறுதல் கூறி எப்போதும் அவருக்கு தான் பக்க பலமாக இருப்பதாக கூறியிருந்தார் மம்முட்டி. இன்னும் சொல்லப்போனால் இந்த மெகா திருமணத்தில் 40 ஜோடிகளில் ஒன்றாக சுருதி- ஜென்சன் திருமணத்தையும் நடத்த திட்டமிட்டு இருந்தார் மம்முட்டி. ஆனால் விதி வேறு விதமாக விளையாடிவிட்டது. இருந்தாலும் இந்த மெகா திருமண நிகழ்வுக்கு சுருதியையும் அழைத்திருந்த மம்முட்டி அவரை தன் பக்கத்திலேயே அமர வைத்து கொண்டார். மேலும் இந்த நிகழ்வின் போது தனது அறக்கட்டளை மூலமாக ஒரு மிகப்பெரிய தொகை ஒன்றையும் சுருதிக்கு வழங்கிய மம்முட்டி, “இது வெறும் பேப்பர் தான்.. ஆனால் அன்பின் அடையாளம்” என்று கூறி சுருதிக்கு மீண்டும் ஆறுதலும் உற்சாகமும் அளித்தார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!