
கேரளாவில் ரசிகர் சந்திப்பில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா
இதன் படப்பிடிப்பில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கலந்து கொண்டு நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும் படப்பிடிப்பு இல்லாத சமயத்திலும் கேரள மலைப்பாதைகளில் ஜாக்கிங் செல்வது, உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் கேரளாவில் உள்ள "ரவுடிஸ்" என்கிற விஜய் தேவரகொண்டாவின் ரசிகர் மன்றத்தினர் ஒரு ரசிகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!