
ஆண் நடிகரின் பாலியல் குற்றச்சாட்டு பொய் : இயக்குனர் ரஞ்சித்தின் வழக்கறிஞர்கள் ஆதாரம்
இந்த இரண்டு வழக்குகளிலும் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் பெற்றுள்ளார் இயக்குனர் ரஞ்சித். இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித்தின் வழக்கறிஞர்கள் அந்த ஆண் நடிகர் கூடிய குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறியுள்ளனர்,
இது குறித்து அவர்கள் கூறும்போது, “சம்பந்தப்பட்ட நடிகர் 2012ல் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற இயக்குனர் ரஞ்சித்தின் படப்பிடிப்பிற்கு அவரை சந்திக்க வந்த போது ஒரு டிஷ்யூ பேப்பரில் தன்னுடைய மொபைல் நம்பரை எழுதிக் கொடுத்த ரஞ்சித் பெங்களூரு விமான நிலையம் அருகே உள்ள தாஜ் ஹோட்டலுக்கு தன்னை வந்து சந்திக்குமாறு கூறியதாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட அந்த ஹோட்டல் துவங்கப்பட்டதே 2015 க்கு பிறகு தான் அப்படி இருக்கையில் எப்படி அந்த ஹோட்டலுக்கு தன்னை வரச்சொன்னதாக அந்த நபர் குறிப்பிட்டது உண்மையாக இருக்க முடியும் என்று கூறி இந்த வழக்கு வேண்டுமென்றே இயக்குனர் ரஞ்சித்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!