
திரையுலக பயணத்தில் 50வது ஆண்டில் பாலகிருஷ்ணா
64 வயதாகும் பாலகிருஷ்ணா கடந்த 1974ல் வெளியான தடம்மா காலா என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இவரது தந்தை என்டி ராமராவ் தான் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்ததுடன் இந்த படத்தை இயக்கியும் இருந்தார். அதனைத் தொடர்ந்து 1983ல் சாகசமே ஜீவிதம் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பாலகிருஷ்ணா நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதுடன் இப்போது வரை தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!