
வயநாடு பாதிப்பு : கலை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டும் மலையாள நடிகர் சங்கம்
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கமான "அம்மா", மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒன்றிணைந்து இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக நிதி திரட்டும் விதமாக கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறது. இது குறித்த தகவலை நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான நடிகர் சித்திக் அறிவித்துள்ளார். வரும் ஆக., 20ம் தேதி கேரளாவில் உள்ள அங்கமாலி நகரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது..
இது பற்றி அவர் கூறும்போது, “இந்த நிகழ்ச்சியை நாங்கள் வேறு ஒரு சமயத்தில் நடத்தலாம் என்று தீர்மானித்திருந்தோம். அதுமட்டுமல்ல இப்படி ஒரு பாதிப்பு நடக்கும் நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சியை நடத்துவது சரியல்ல என்றாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மழவில் விருது வழங்கும் விழா நிகழ்ச்சியை நடத்த தீர்மானித்துள்ளோம். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை அப்படியே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்காக வழங்க இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!