
நஸ்ரியாவின் சூட்சும தர்ஷினி படப்பிடிப்பு நிறைவு
தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் சூட்சும தர்ஷினி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நஸ்ரியா. கடந்த மே மாத இறுதியில் துவங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்வை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கடந்த 2018ல் மலையாளத்தில் வெளியான நான்சென்ஸ் என்கிற படத்தை இயக்கிய எம்.சி ஜிதின் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக மின்னல் முரளி இயக்குனரும் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் சமீபத்தில் வெளியான குருவாயூர் அம்பல நடையில் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவருமான பஷில் ஜோசப் நடிக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!