
புகார் கொடுத்த நடிகரை தேடி புரமோஷன் நிகழ்ச்சிக்கே வந்த நடிகை : தடுத்து நிறுத்திய போலீசார்
இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பாராத விதமாக வருகை தந்த நடிகை லாவண்யா சவுத்ரி தனது காதலரான ராஜ் தருணை நேரில் சந்தித்து பேச முயற்சி செய்தார். ஆனால் இருவருக்குமான வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் லாவண்யா இந்த நிகழ்ச்சிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அங்கிருந்தபடியே, என்னுடைய ராஜ் தருணை சந்தித்து பேச என்னை விடுங்கள்.. எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஒரு மனிதன் எதற்காக ஓட வேண்டும் என்று கேள்விகளை எழுப்பிய லாவண்யா, இந்தப் படத்தின் நாயகி மால்வி மல்கோத்ராவுக்கும் ராஜ் தருணுக்கும் இருக்கும் உறவு குறித்தும் கேள்வி எழுப்பினார். ஆனாலும் போலீசார் லாவண்யா சவுத்ரியை வாசலிலேயே திருப்பி அனுப்பினார். இதனால் விழா அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!