
படப்பிடிப்பில் கார் விபத்தில் சிக்கிய லியோ, பிரேமலு, ரோமாஞ்சம் நடிகர்கள்
லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்த மேத்யூ தாமஸ், பிரேமலு படத்தில் ஹீரோவின் நண்பனாக படம் முழுவதும் பயணித்த சங்கீத் பிரதாப், ரோமாஞ்சம் படத்தில் கதாநாயகனாக நடித்த அர்ஜூன் அசோகன் உள்ளிட்ட ஐந்து பேர் பங்கு பெற்ற கார் சேசிங் காட்சி ஒன்று நள்ளிரவு இரண்டு மணி அளவில் படமாக்கப்பட்டது. இந்த காட்சி படமாக்கப்பட்ட போது திடீரென ஒரு திருப்பத்தில் இரண்டு பைக்குகள் எதிர்பாராமல் நிறுத்தப்பட்டிருந்ததை அடுத்து கட்டுப்பாட்டை இழந்து அவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் பின்னால் துரத்தி வந்த காரும் இவர்கள் கார் மீது மோதியதாக சொல்லப்படுகிறது.
இதில் உள்ளே பயணித்த ஸ்டண்ட் மேன் மற்றும் மேலே சொன்ன நடிகர்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட நடிகர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதி விரைவாக வண்டி ஓட்டியதாக கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்த சம்பவம் நடைபெற்றாலும் இது வெளியே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த விஷயம் வெளியே கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!