
காப்பிரைட் சர்ச்சையில் சிக்கிய ரக்சித் ஷெட்டி
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் ‛பேச்சுலர் பார்ட்டி" என்கிற படம் வெளியானது. இந்தப் படத்தை இவரே தயாரித்தும் இருந்தார். அர்ஜுன் ராமு என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஏற்கனவே வெளியான நியாய எல்லிடே மற்றும் காலிமாத்து ஆகிய படங்களில் இடம் பெற்ற பாடல்களை தங்களது அனுமதி இல்லாமல் இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பதாக எம்ஆர்பி மியூசிக் என்கிற நிறுவனம் புகார் அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து காப்பிரைட் உரிமை சட்டத்தின்படி பெங்களூரு போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!