
கன்னட குணசித்ர நடிகை புற்று நோயால் மரணம்
சில மாதங்களுக்கு முன்பு அபர்ணா வஸ்த்ரேவுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அபர்ணா வஸ்த்ரே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.
அபர்ணா வஸ்த்ரே மறைவுக்கு கன்னடன திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக முதல்வர் சித்தாராமையா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பன்முக திறமை கொண்ட அபர்ணா மரணம் அடைந்த செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!