
திலீப்பின் மூன்று படங்களையும் கைவிட்ட ஓடிடி நிறுவனங்கள்
கடந்த வருடம் திலீப் நடிப்பில் பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதனால் படம் வெளியாவதற்கு முன்பு படத்தை வாங்கிக் கொள்வதாக வாக்குறுதி அளித்த ஓடிடி நிறுவனங்கள் படத்தின் ரிசல்ட்டை பார்த்த பிறகு இப்போது வரை பாராமுகம் காட்டி வருகின்றனவாம். இதையடுத்து திலீப் நீண்ட நாட்களாக நடித்து வரும் பறக்கும் பாப்பன் மற்றும் அவரது 150 வது படம் ஆகியவற்றின் தயாரிப்பிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!