
கல்கியில் வரவேற்பை பெற்ற பஹத் பாசில் ஆவேசம் வசனம்
தமிழில் மட்டுமல்ல இந்த படத்தின் மலையாள வெர்சனிலும் அவரே குரல் கொடுத்துள்ளார். அதேசமயம் ஒவ்வொரு மொழிக்கும் டப்பிங்கின் போது வசனகர்த்தாக்கள் அங்குள்ள பேமஸான விஷயங்களை சேர்ப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஹத் பாசிலின் நடிப்பில் வெளியான ஆவேசம் படத்தில் அவர் பேசும் "எடா மோனே" என்கிற வசனம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. தற்போதும் ரீல்ஸ் வீடியோக்களில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வசனத்தை கல்கி படத்தின் டப்பிங்கில் கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார். இந்த வசனம் வரும் காட்சியில் தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களிடம் பலத்த கைதட்டலையும் பெற்றுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!