
ஐடென்டிடி படப்பிடிப்பை நிறைவு செய்த வினய் ராய்
இந்த படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் வினய் ராய். அவரது நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு குறித்து பாராட்டியுள்ள இயக்குனர் அகில்பால் கூறும்போது, “கடந்த 2022 செப்டம்பர் 23ம் தேதி இந்த கதையை நீங்கள் கேட்ட நாளிலிருந்து இப்போது வரை உங்களது எனர்ஜி இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்துள்ளது. நீங்கள் பங்குகொண்டு நடித்த இந்த 52 நாட்களும் மறக்க முடியாதவை. உங்களுடன் பணியாற்றியது பொழுதுபோக்காக இருந்ததுடன், நீங்கள் ஆலன் ஜேக்கப் என்கிற உங்கள் கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பையும் மறக்க முடியாது. நீங்கள் இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கடைசியாக பேசிய வசனமான "இது முடிவு இல்லை" என்று சொல்வது போல, இனிவரும் அடுத்தடுத்த படங்களிலும் நாம் இணைந்து பணியாற்றுவோம்” என்று கூறியுள்ளார். தற்போதைக்கு இந்த படத்தின் 123வது நாள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!