
வலது கையை ஹீரோவாக்கிய பஹத் பாசில்
இதற்கு முன்பு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த சஜின் கோபு ஆவேசம் படத்தின் மூலம் பிரபலமானதை தொடர்ந்து தற்போது புதிதாக உருவாக இருக்கும் படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஆவேசம் பட இயக்குனர் ஜித்து மாதவன் மற்றும் பஹத் பாசில் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். அது மட்டுமல்ல இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் ஸ்ரீஜித் பாபு கூட ஆவேசம் படத்தில் ஹாஸ்டல் வார்டன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான். கதாநாயகியாக வளர்ந்து வரும் இளம் நடிகையான அனஸ்வரா ராஜன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!