
பஹத் பாசில் - குஞ்சாக்கோ போபன் கூட்டணியில் உருவாகும் போகன் வில்லா
இந்த நிலையில் தற்போது போகன் வில்லா என்கிற புதிய படத்தை இயக்குகிறார் அமல் நீரத். இந்த படத்தில் பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகியாக ஜோதிர்மயி நடிக்கிறார்.
அதிரடி ஆக் ஷன் படமாக இது உருவாக இருக்கிறது என்பது இந்த படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு முன்னதாக பஹத் பாசில் நடித்த இயோபிந்தே புஸ்தகம் மற்றும் வரதன் ஆகிய படங்களை இயக்கியுள்ள அமல் நீரத் அவர் நடித்த ட்ரான்ஸ் படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!