
மலையாள படங்களில் பெண்கள் எங்கே? - அஞ்சலி மேனன் கேள்வி
குறிப்பாக மஞ்சும்மேல் பாய்ஸ், மம்முட்டியின் பிரம்மயுகம், கண்ணூர் ஸ்குவாட், பஹத் பாசிலின் ஆவேசம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகிகளே இடம்பெறவில்லை. இந்த நிலையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கி வரும் "பெங்களூர் டேய்ஸ்" புகழ் இயக்குனர் அஞ்சலி மேனன், மலையாள சினிமாவில் பெண்கள் எங்கே போனார்கள் என தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார்.
குறிப்பாக ஆவேசம் படத்தில் இடம்பெறும் கல்லூரி காட்சிகளில் பெண்களை அதிகம் காட்டுவதற்கு வாய்ப்பு இருந்தும் கூட ஒரு மாணவனின் தாயார் என்கிற ஒரே ஒரு பெண் கதாபாத்திரத்தை மட்டும் காட்டி பெண்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்து விட்டார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்த படங்களின் இயக்குனர்கள் இது பற்றி கூறும்போது கதைக்கு தேவையான கதாபாத்திரங்களை மட்டுமே படத்தில் இடம்பெறச் செய்துள்ளோம் என்று கூறுகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!