
நான்கே மாதத்தில் 1000 கோடி வசூல் : மலைக்க வைக்கும் மல்லுவுட்
இதில் மஞ்சும்மேல் பாய்ஸ் 240 கோடி, ஆடு ஜீவிதம் 157 கோடி, ஆவேசம் 153 கோடி என இந்த மூன்று படங்களே 550 கோடி வசூலை தொட்டு விட்டன. இவை தவிர பிரேமலு, பிரம்மயுகம், வருஷங்களுக்கு சேஷம் என இன்னும் சில படங்கள் சேர்ந்து ஆயிரம் கோடி வசூலை தொட்டுவிட்டன. அதேசமயம் கடந்த 2023ல் மலையாள சினிமாவின் மொத்த வசூலே 500 கோடி தான் என்பது இன்னொரு ஆச்சரிய தகவல். அந்த வகையில் கடந்த நான்கு மாதங்களில் மட்டுமே இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 20% வசூலை மலையாள சினிமா மட்டுமே கொடுத்திருக்கிறது. இந்த வருடத்திற்குள் இந்த வசூல் இரட்டிப்பு ஆவதற்கும் அதை தாண்டுவதற்கும் கூட நிறைய வாய்ப்புகள் உள்ளன என தாராளமாக சொல்லலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!