
என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு
“படம் அருமையாக இருக்கிறது. மொத்த படத்திலும் பஹத் பாசில் தன்னுடைய ஸ்டைலால் அசத்தியுள்ளார். என்னுடைய கதாபாத்திரங்கள் சிலவற்றின் குறிப்புகள் இருந்தாலும் கூட அதை பஹத் பாசில் அவரது சொந்த ஸ்டைலில் செய்திருக்கிறார் என்று பாராட்டியுள்ளார் மம்முட்டி. இதுபோன்று பல கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் மம்முட்டி நடித்துள்ளார். பஹத் பாசில் கூட ஒரு பேட்டியில், ராஜமாணிக்கம் மற்றும் சட்டம்பிநாடு ஆகிய படங்களில் மம்முட்டியின் கதாபாத்திரங்களை இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக் கொண்டு இந்தப்படத்தில் நடித்ததாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!