
இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில்
சமீபத்திய பேட்டி ஒன்றில் பஹத் பாசில் கூறும்போது, “நான் சாதாரணமாக வெளியே செல்வதற்கு யோசிப்பதில்லை. இப்போதும் கூட திடீரென வீட்டில் பால் இல்லாவிட்டாலோ அல்லது எனக்கு தேவையானது இல்லா விட்டாலோ அருகில் உள்ள கடைக்குச் சென்று நான்தான் வாங்கி வருகிறேன். அப்போது ரசிகர்கள் யாரும் ஓடிவந்து என்னை மொய்த்து கொள்வதில்லை. அதே சமயம் என்னை பார்த்து பலர் புன்னகைப்பார்கள். சிலர் செல்பி எடுக்க மொபைல் போன்களை தூக்குவார்கள். அதை பார்த்ததும் அங்கிருந்து உடனடியாக ஓடி வந்து விடுவேன்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!