
முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்
இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம் மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் வங்கிக்கணக்கை முடக்கியதுடன் இதுகுறித்து விசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு வரும் மே 22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் மே 22 வரை தாங்கள் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் வழங்குமாறு கோரி சவ்பின் சாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி இருவரும் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அவர்களது மனுவை விசாரித்த நீதிமன்றம் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
இவர்கள் அளித்த மனுவில், தாங்கள் லாபத்தொகை தராமல் ஏமாற்றவில்லை என்றும் வழக்கு தொடர்ந்துள்ள சிராஜ் என்பவர் ஆன்லைன் மீடியாக்களில் வெளியாகும் 250 கோடி வசூல் என்பது போன்ற தொகைகளை மனதில் வைத்துக் கொண்டு லாபத்தை கேட்கிறார் என்றும் கூறியிருந்தனர். ஆனால் முறைப்படி இந்த படம் எவ்வளவு வசூலிக்கிறது என்பதை சரியாக கணக்கிட்டு அதன் பிறகு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி அவருக்கு லாபத்தொகை பகிர்ந்து அளிக்க இருக்கிறோம் என்றும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!