
நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை
தொடர்ந்து பிசியான நடிகையாக மாறுவார் என எதிர்பார்த்தால் பெரிய அளவில் அவரை படங்களை பார்க்க முடியவில்லை. இதற்கு காரணம் அவரது உடல் எடை அதிகரித்தது தான் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது நடன வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். பலரும் அவரது நடன அசைவுகளை பார்த்து கிண்டலாக விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்தனர். பலர் உருவ கேலியும் செய்திருந்தனர்.
இதுகுறித்து விளக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அன்னா ரேஷ்மா ராஜன், தான் கடந்த சில காலமாகவே தன்னுடல் தாங்கு திறன் நோயால் அவதிப்பட்டு வருவதாகவும் சில நேரங்களில் உடல் எடை தானாகவே கூடுகிறது, சில நேரங்களில் தானாகவே மெலிந்து விடுகிறது என்றும் கூறியுள்ள அவர் அதனால் தனது நடனம் குறித்து தயவுசெய்து உடல் ரீதியாக விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நடனம் என்பது தனது உயிர் என்றும் இப்படிப்பட்ட ஒரு உடல் ரீதியான பிரச்சனை இருப்பதால் அதற்காக வீட்டிலேயே சும்மா அமர்ந்து கொண்டு இருக்க முடியாது என்றும் கூறியுள்ள அவர் எனது நடனம் பிடித்திருந்தால் பாருங்கள்.. இல்லையென்றால் இப்படி கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!