
ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ?
அதன் பிறகு இந்த ஐந்து வருடங்களில் தொடர்ந்து வெளியான அவரது ஏழு படங்களும் தோல்வி படங்களாகவே அமைந்தன. அதிலும் கடைசியாக வெளியான பாந்த்ரா மற்றும் கடந்த மாதம் வெளியான தங்கமணி ஆகிய படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவின. இந்த நிலையில் தங்கமணி படம் வெளியாகி சரியாக 50 வது நாளில் வரும் ஏப்-26 ஆம் தேதி திலீப் நடித்துள்ள பவி கேர் டேக்கர் என்கிற படம் வெளியாக இருக்கிறது.
வினீத் குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக வெளியான திலீப்பின் மூன்று படங்களும் சீரியஸான கதையம்சம் கொண்டதாக இருந்ததன. இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்துடன் வழக்கமான ஒரு திலீப் படமாக உருவாகியுள்ளதாம். அதனால் இந்த பவி கேர்டேக்கர் படம் திலீப்புக்கு ஒரு வெற்றி படமாக அமைந்து அவரை கை தூக்கிவிடும் என எதிர்பார்க்கலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!