
மஞ்சும்மேல் பாய்ஸ் ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா?
பொதுவாக தென்னிந்திய அளவில் புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியான பிறகு நான்கு வாரங்களிலேயே வெளியாகிவிடும். ஆனால், இந்தப் படத்தின் தெலுங்கு வெளியீடு தாமதமாக வெளியானது. மேலும், தியேட்டர்களிலும் தொடர்ந்து நல்ல கூட்டத்துடன் ஓடியதால் ஓடிடி வெளியீட்டைத் தள்ளி வைத்தனர்.
அடுத்த வாரம் மே 3ம் தேதிதான் ஓடிடியில் வெளியாக உள்ளது. பிப்ரவரி 22ம் தேதி வெளியான படம் சுமார் 10 வாரங்களுக்குப் பிறகே வெளியாகிறது. இருப்பினும் இப்படத்தின் ஓடிடி உரிமை சுமார் 20 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாம். தியேட்டர்களைப் போலவே ஓடிடி தளத்திலும் வரவேற்பு அதிகமாக இருக்கும் என்பதால் அந்த பத்து வார இடைவெளியைக் கூட ஓடிடி நிறுவனம் ஏற்றுக் கொண்டதாம்.
மலையாளத் திரையுலகத்தில் ஒரு படத்தின் ஓடிடி உரிமை இவ்வளவு விலைக்கு விற்கப்படுவது இதுவே முதல் முறை என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!