
தொடர்ந்து காமெடி படங்களில் நடிக்கும் பஹத் பாசில்
அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் அவரது நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படத்தில் மிகப்பெரிய தாதாவாக நடித்திருந்தாலும் படம் முழுக்க நகைச்சுவையை அள்ளித் தெளிக்கும் விதமாக நடித்திருந்தார் பஹத் பாசில். மேலும் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் இதில் வில்லனாக இல்லாமல் ரஜினியுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
சமீபத்தில் அவர் கூறும்போது, தெலுங்கிலும் இதுபோன்று ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது. அந்த வகையில் கடந்த வருடம் ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ் கார்த்திகேயா தயாரிப்பில் தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். அதில் "டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்" என்கிற பிக்சன் காமெடி படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!