
ஆடுஜீவிதம் படம் பார்த்த ரியல் ஹீரோவின் ரியாக்சன்
சமீபத்தில் இந்த கதையின் நிஜ ஹீரோவான நஜீப்புக்கு "ஆடுஜீவிதம்" திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த நஜீப் மிகவும் நெகிழ்ந்து போய் கண்கலங்கி விட்டார். இது குறித்து அவர் கூறும்போது, இயக்குனர் பிளஸ்சியும், பிரித்விராஜும் சேர்ந்து தான் வாழ்ந்த நிஜமான வாழ்க்கையை திரையில் காட்டி உள்ளார்கள் என்றும் குறிப்பாக ஒருநாள் பிரித்விராஜ் தூங்கி விழித்து வலியுடன் எழும்போது தனது மனைவி பெயரை கூவி அழைக்கும் காட்சியில் தனது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
மேலும் பிரித்விராஜ் நீண்ட நாட்களாக தன் முகத்தை தானே பார்க்க முடியாத நிலையில் ஒருநாள் கண்ணாடியில் பார்த்து அதிர்ச்சி அடையும் காட்சியானது, அதேபோன்று தான் நிஜத்தில் அனுபவித்த கொடுமையை நினைவூட்டியது என்றும் கூறியுள்ளார். இந்த படத்தை தனது குடும்பத்தினரும் நண்பர்களும் திரையரங்கில் பார்க்க ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார் நஜீப்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!