
என் படங்களை என் மகளுக்கு காட்ட மாட்டேன்.. ஏன் தெரியுமா ? : பிரித்விராஜ் பதில்
இது பற்றி அவர் கூறும்போது, “நான் நடித்த படங்களை இதுவரை ஒன்பது வயதான என் மகளுக்கு காட்டியதில்லை. காரணம் அவள் படம் பார்க்கும்போது அதன் ஹீரோவாக என்னை பார்க்க மாட்டாள். ஒரு தந்தையாக தான் படத்திலும் என்னை பார்ப்பாள். அது அவளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் தான் இதை கடைபிடித்து வருகிறேன்.
அதேசமயம் தற்போது நான் நடித்துள்ள ஆடுஜீவிதம் படம் இதிலிருந்து ஒரு விதிவிலக்கு என்று சொல்லலாம். காரணம் இந்த படத்தை என் மகள் பார்க்கும்போது உண்மையான சினிமா என்ன என்கிற அனுபவத்தை உணர்ந்து கொள்வாள் என்கிற நம்பிக்கையும் தொழில் ரீதியாக நான் ஒரு நடிகர் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியும் என்கிற எண்ணமும் தான் காரணம்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!