
லூசிபர்-2 படப்பிடிப்பில் இணைந்த டொவினோ தாமஸ்
ஏற்கனவே மோகன்லாலை வைத்து இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் டொவினோ தாமஸ் இணைந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாகவே மூன்றுக்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக மாறி மாறி நடித்து வந்தார். அதில் அவர் இறுதியாக நடித்து வந்த படத்திற்காக புதிய கெட்டப்பில் இருந்ததால் லூசிபர் இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தாமதமானது. இந்த நிலையில் கைவசம் இருந்த படங்களின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு தற்போது லூசிபர்-2வுக்குள் நுழைந்துள்ளார் டொவினோ தாமஸ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!