
தெலுங்கில் வெளியாகும் பிரேமலு
இதைத்தொடர்ந்து இந்த படத்தின் ரீமேக் உரிமைக்காக தமிழ், தெலுங்கில் இருந்து சிலர் முயற்சித்து வருகிறார்கள். அதே சமயம் படக்குழுவினர் ரீமேக் உரிமையை தராமல் நேரடியாக ஒவ்வொரு மொழியிலும் டப்பிங் செய்து வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல இந்த படம் இயக்குனர் ராஜமவுலியின் மகன் எஸ்எஸ் கார்த்திகேயாவை மிகவும் கவர்ந்து விட்டதால் தெலுங்கில் இந்த படத்தை மொழிமாற்றம் வெளியிடும் உற்சாகத்தையும் வழிகாட்டுதலையும் படக்குழுவதற்கு ஏற்படுத்தி தந்துள்ளார். இதை தொடர்ந்து வரும் மார்ச் 8ஆம் தேதி இந்த படம் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள பிரேமலு படக்குழுவினர் இயக்குனர் ராஜமவுலியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!