
நடிகை அனுஸ்ரீ உடன் திருமணமா? - உன்னி முகுந்தன் கிண்டலான பதில்
தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர் பாகமதி படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்த பின்னர் அவருடைய நெருங்கிய நண்பராகவே மாறிவிட்டார். சிலமுறை சர்ச்சையான விஷயங்களில் இவர் பெயர் அடிபட்டாலும் இதுவரை எந்த ஒரு காதல் கிசுகிசுவிலும் சிக்காமல் அதே சமயம் திருமணம் பற்றியும் வாய் திறக்காமல் தனது பட வேலைகளை கவனித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் மலையாள நடிகை அனுஸ்ரீ உடன் இணைந்து கலந்து கொண்டார் உன்னி முகுந்தன். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்று ஒரு செய்தி சோசியல் மீடியாவில் கிளம்பியது. இந்த செய்தி தனது கவனத்திற்கு வந்ததும் இதற்கு பதில் அளித்துள்ள உன்னி முகுந்தன், ‛‛இந்த மாதிரி செய்திகளை நிறுத்த வேண்டும் என்றால் நான் எவ்வளவு பணம் தர வேண்டும்"" என்று கிண்டலாக கேட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!