
மலைக்கோட்டை வாலிபன் சென்சார் தகவலில் உண்மை இல்லை : தயாரிப்பாளர் விளக்கம்
வரும் ஜனவரி 25ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டதாகவும் படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி ஏழு நிமிடங்கள் என்றும் சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகின. தற்போது பட தயாரிப்பு நிறுவனம் இதனை மறுத்துள்ளது. இன்னும் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் சென்சாருக்காக அனுப்பப்படவில்லை என்றும் படம் ரிலீஸ் ஆகும் தேதிக்கு சில நாட்களுக்கு முன்பாக தான் சென்சாருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அது மட்டுமல்ல படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 37 நிமிடம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!