
நேர் பட புரமோஷன் நிகழ்ச்சியில் ஆன்லைன் நண்பர்களை வரவழைத்து குஷிப்படுத்திய மோகன்லால்
படத்தின் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்தில் நடப்பதாகவும், ஒரு முக்கிய வழக்கை துவங்கி அதன் பின்னணியில் ஒளிந்துள்ள குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான மோகன்லால் நடத்தும் சட்டப் போராட்டம் தான் இந்த படம். வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் மோகன்லால். அந்த வகையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் தனது நீண்டநாள் ஆன்லைன் நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து குரூப் செல்பி எடுத்து அனைவரையும் மகிழ்வித்துள்ளார். மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் மோகன்லால்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!