
2024 செப்டம்பரில் பிரபாஸின் ‛ஸ்பிரிட் ரிலீஸ்
இந்த நிலையில், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ‛அன்ஸ்டாப்பபிள் வித் என்.பி.கே" என்ற நிகழ்ச்சியில் அனிமல் படக்குழு கலந்துகொண்டது. அப்போது, தொகுப்பாளராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா, சந்தீப் ரெட்டி வாங்காவிடம், “எனது பேரன் தேவன்ஷ், பிரபாஸின் ஸ்பிரிட் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். படப்பிடிப்பு எப்போது தொடங்கவுள்ளது?” எனக் கேட்டார். அதற்கு இயக்குனர், “ஸ்பிரிட் படம் செப்டம்பர் 2024ல் திரைக்கு வரும்” என்றார். இந்த அப்டேட்டால் பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!