
மனநோயாளியாக நடிக்கும் டொவினோ தாமஸ்
இந்த படத்தில் சற்று மனநலம் பாதித்தவராக டொவினோ தாமஸ் நடித்துள்ளார். இறந்தவர்களை பேச வைக்க முடியும் என்று நம்பி அதற்காக ஒரு கருவியை கண்டுபிடிக்க முயற்சிப்பவராக நடிக்கிறார். இதன் மூலம் மனித குலம் போரினால் அழிவதையும், போருக்கு எதிரான குரலை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்பதையும் படம் பேசுகிறது. வரும் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படம் குறித்து இயக்குனர் பிஜுகுமார் தாமோதரன் கூறும்போது “இது போருக்கு எதிரான படம். மேலும், வாழ்க்கை, மரணம், பயம், நம்பிக்கை, உதவியற்ற தன்மை, அன்பு, வெறுப்பு, கனவுகள் போன்ற உணர்ச்சிகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்தும் படம் ஆழமாக பேசும். குறிப்பாக சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான குரலாக ஒலிக்கும்” என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!