
தெலுங்கில் தீபாவளியை ஆக்கிரமிக்கும் டப்பிங் படங்கள்
தமிழ்த் திரையுலகம் இந்த நான்கு படங்களுடன் தீபாவளியைக் கொண்டாட உள்ளது. ஆனால், தெலுங்குத் திரையுலகத்தில் முக்கியமான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அங்கு, "அலா நின்னு சேரி" என்ற ஒரே ஒரு நேரடி தெலுங்குப் படம் மட்டுமே நாளை வெளியாக உள்ளது. தமிழ்ப் படங்களான “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான்” ஆகிய படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு அங்கு நாளை வெளியாகின்றன.
"கிடா" படமும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு "தீபாவளி" என்ற பெயரில் நவம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது. சல்மான் கான் நடித்துள்ள ஹிந்திப் படமான "டைகர் 3" படம் தெலுங்கில் டப்பிங் ஆகி நவம்பர் 12 அன்று வெளியாகப் போகிறது. நான்கு டப்பிங் படங்களுடனும், ஒரே ஒரு தெலுங்குப் படத்துடனும் தெலுங்கு ரசிகர்கள் இந்த வருட தீபாவளியைக் கொண்டாடப் போகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!