
மலையாள நடிகை தற்கொலை
35 வயதாகும் ரெஞ்சுஷா மேனன் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அவரது அறை நீண்ட நேரம் திறக்கப்படாமலேயே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து திறந்தனர். அப்போது ரெஞ்சுஷா மேனன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து ஸ்ரீகாரியம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரெஞ்சுஷா மேனன் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.. ரெஞ்சுஷா சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் கனவுடன் இருந்தார். அது நிறைவேறவில்லை. தொலைக்காட்சி தொடர்களிலும் பெரிய கேரக்டர்கள் கிடைக்கவில்லை. மேலும் சில வருடங்களாக பண நெருக்கடியிலும் இருந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று உறவினர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். இது தவிர வேறு காரணம் ஏதும் இருக்கிறதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!