
8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் மோகன்லால் - ஜோஷி கூட்டணி : கதை எழுதும் விக்ரம் வில்லன் நடிகர்
கடந்தாண்டு நடிகர் சுரேஷ் கோபியை வைத்து இவர் இயக்கிய பாப்பன் திரைப்படமும் பெரிய அளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது ஜோசு ஜார்ஜ், செம்பான் வினோத் என வில்லன் நடிகர்களை வைத்து ஆண்டனி என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஜோஷி. இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஜோஷி. படத்திற்கு "ரம்பான்" என டைட்டில் வைக்கப்பட்டு, டைட்டில் குறித்த வீடியோ ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படத்திற்கு விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் செம்பான் வினோத் ஜோஸ் தான் கதை எழுதுகிறார். ஜோஷியின் டைரக்சனில் தொடர்ந்து கடைசியாக அவரது இரண்டு படங்களில் இவர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!