
மோகன்லாலின் தோல்வி படங்களின் சாதனையை முறியடிக்குமா மலைக்கோட்டை வாலிபன்?
இந்த படத்தில் மல்யுத்த வீரராக நடித்துள்ளார் மோகன்லால். அதற்கு ஏற்றபடி படத்தில் வித்தியாசமான தோற்றத்திலும் அவர் நடித்துள்ளார். வரும் ஜனவரி 25ம் தேதி இந்த படம் ரிலீஸாக இருக்கிறது. இதற்கு முன்னதாக மோகன்லால் படங்களின் அதிகபட்ச முதல் நாள் வசூலாக 7.2 கோடி வசூலித்த "ஒடியன்" திரைப்படமும் 6.5 கோடி வசூலித்த "மரைக்கார்" திரைப்படமும் அடுத்தடுத்து இருக்கின்றன. இந்த இரண்டு படங்களுமே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வியை தழுவிய படங்கள்.
அதற்குப் பிறகு வெளியான மோகன்லாலின் படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியானபோது வரவேற்பை பெற்றன. திரையரங்குகளில் வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளும்படியான முதல்நாள் சாதனை எதையும் படைக்கவில்லை. இந்த நிலையில் ஜனவரி 25ல் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்றும் ரசிகர்களிடம் இதற்கு ஏற்பட்டுள்ள கூடுதல் எதிர்பார்ப்பு காரணமாக ஏற்கனவே அவரது படங்கள் வைத்திருக்கும் முதல்நாள் வசூல் சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்றும் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக வட்டாரத்திலும் பேசிக் கொள்கின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!