
மலையாள தயாரிப்பாளர் கங்காதரன் காலமானார்
1996ல் வெளியான இவரின் "கானாக்கினாவு", 2001ம் ஆண்டு வெளியான "சாந்தம்" ஆகிய படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது. 5 படங்களுக்கு மாநில விருது கிடைத்துள்ளது. தொழிலதிபரான இவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2011ல் கோழிக்கோடு வடக்கு தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு போட்டியிட்டார். மேலும், மாத்ருபூமியின் இயக்குநராகவும் சில வருடங்கள் இருந்தார்.
80 வயதான இவர் கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். கங்காதரன் மறைவுக்கு கேரள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கங்காதரனின் வாரிசுகள் ஷேனுகா ஜெய்திலக், ஷெக்னா விஜில் மற்றும் ஷெர்கா சந்தீப் ஆகியோரும் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!