
டொவினோ தாமஸிற்கு ஆசியாவின் சிறந்த நடிகர் விருது
ஆசியா, ஆப்ரிக்கா, ஓசியானியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த படங்களுக்கும், கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. அந்த வரிசையில் ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருது மலையாள நடிகர் டொவினோ தாமசுக்கு வழங்கப்பட்டது. இதனை அவர் நெதர்லாந்து நாட்டிற்கு நேரில் சென்று பெற்றுக் கொண்டார்.
முன்னனி மலையாள நடிகரான டொவினோ தாமஸ் தமிழில் "மாரி 2" படத்தில் வில்லனாக நடித்தார். இவர் நடித்த "மின்னல் முரளி" படமும், "2018" படமும் பெரிய வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக 2018 படம் 200 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் சரித்திரம் படைத்தது. இந்த படம்தான் தற்போது ஆஸ்கர் விருதுக்கு இந்திய அரசின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் நடித்ததாற்காகத்தான் ஆசியாவின் சிறந்த நடிகர் விருது டொவினோ தாமசுக்கு வழங்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!