
எங்களுக்கும் கார் கிடைக்குமா ? - ஆர்டிஎக்ஸ் ஹீரோ தமாஷ் பதிவு
கடந்த சில நாட்களாகவே ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அதன் ஹீரோ, இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு விலை உயர்ந்த காரும் பங்குத்தொகையும் பரிசாக தயாரிப்பு நிறுவனம் வழங்கி வருகிறது. இதையடுத்து தங்களுக்கும் அதுபோல ஏதாவது கிடைக்குமா என தனது எதிர்பார்ப்பை சோசியல் மீடியா பதிவு மூலமாக தமாஷாக வெளிப்படுத்தி உள்ளார் நாயகர்களில் ஒருவராக நடித்துள்ள ஆண்டனி வர்கீஸ்.
சமீபத்தில் தான் படத்தின் ஹீரோக்கள் மூவரும் தயாரிப்பாளர் சோபியா பாலை நேரில் சந்தித்து வந்தனர். இந்த பதிவில் அதுகுறித்து குறிப்பிட்டுள்ள ஆண்டனி வர்கீஸ், “ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு அதன் ஹீரோ ரஜினி, இயக்குனர் நெல்சன், ஆகியோருக்கு கார் பரிசாக வழங்கி இருக்கிறார்கள், இந்த டாபிக்கை பற்றி பேசலாம் என நினைக்கும்போதெல்லாம் , சோபியா பால் மேடம் விதவிதமான உணவுகளை சாப்பிட சொல்லி எங்களை பேச விடாமல் செய்து விட்டார்கள்,
மீண்டும் பேச முயற்சிக்கும்போது சம்பந்தமே இல்லாமல் வேறு டாபிக்கை பேசி இது பற்றி பேச வாய்ப்பு தராமல் செய்து விட்டார்கள். அனேகமாக வீட்டின் கதவுகளை பெரிதாக மாற்றி வைக்க வேண்டியது தான்.. ஏதோ பெரிதாக வரப்போகிறது என்று நினைக்கிறேன்.. படத்தின் இயக்குனர் நகாஷ் ஹிதாயத் கூட போர்சே கார் ஓட்டும் முறைகளை கற்று வருகிறார் என்றும் கேள்விப்பட்டேன்: எனக் கூறியுள்ளார்.
இதற்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் உங்களுக்கும் நிச்சயமாக கார் இல்லை என்றாலும் கூட பைக்காவது கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!