
சலார் படத்தின் ஆடியோ உரிமை இத்தனை கோடியா?
ஆக 24, 2023
Advertisement
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் "சலார்". பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி புதிய சாதனையை நிகழ்த்தியது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் உரிமையை டி - சீரியஸ் நிறுவனம் ரூ. 28 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது மற்ற உரிமைகளின் பிஸ்னஸ் நடைபெற்று வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!