
நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் கண்ணப்பா துவக்கம்
இந்த நிலையில் 24 பிரேம்ஸ் பேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர்.மோகன் பாபு தயாரிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் தனது கனவு திரைப்படமான "கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை" என்னும் படத்தில் கண்ணப்பா வேடத்தில் நடிக்கிறார் விஷ்ணு மஞ்சு. கதையின் நாயகியாக நுபுர் சனோன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள்.
பிரபல எழுத்தாளர்கள் பருச்சுரிகோபாலகிருஷ்ணா, தோட்டா பிரசாத், தோட்டப்பள்லி சாய்நாத், புர்ரா சாய் மாதவ் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். மணிசர்மா மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸே இசையமைக்கின்றனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற "மஹாபாரதம்" தொடரை இயக்கிய முகேஷ் சிங் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
இப்படம் குறித்து நடிகர் விஷ்ணு மஞ்சு கூறுகையில், “மிகுந்த உற்சாகத்துடனும், பெருமிதத்துடனும், எனது நேசத்துக்குரிய படைப்பான "கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை" படத்தை துவங்கியிருக்கிறேன். இந்த திரைப்படம் தலைசிறந்த படைப்பாகவும், அன்பின் உழைப்பாகவும் பல ஆண்டுகளாக கவனமாக வளர்க்கப்பட்டது. "கண்ணப்பாவின்" ஆழமான கதை பல தலைமுறைகளாக சினிமா ரசிகர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் காலத்தால் அழியாத சரித்திரம், காலங்காலமாக ஆழ்ந்த பயபக்தியை பெற்றுள்ளது. இந்தப் படம் என்னுடைய அடங்காத ஆர்வத்திற்குச் சான்றாக நிற்கிறது.""என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!