
இறுதிகட்டத்தில் மோகன்லாலில் பரோஸ் : டிசம்பரில் வெளியாகிறது
ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைத்திருக்கிறார். 3டியில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்கிறார்கள். இது பான் இந்தியா படமாக வெளியிடப்படுகிறது.
ஜிஜோ புன்னூஸ் எழுதிய "பரோஸ்: கார்டியன் ஆப் டி"காமா"ஸ் ட்ரெஷர்" என்ற நாவலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம் என்கிறார்கள். இதில் வாஸ்கோடகாமாவாக ஸ்பானிஷ் நடிகர் ரபேல் அமர்கோ நடிக்கிறார். பரோஸ் கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார்.
இந்த படத்தின் பின்னணி இசையயை லிடியன் நாதஸ்வரம் லாஸ் ஏஞ்சல்ஸ், மற்றும் ஹங்கேரியில் அமைத்து வருகிறார். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. டிசம்பர் மாதம் படத்தை வெளியிட்ட திட்டமிட்டிருக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!