
மீனவர்களுடன் நாக சைதன்யா சந்திப்பு
ஆக 04, 2023
Advertisement
கார்த்திகேயா பட இயக்குனர் சாந்து மான்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா தனது 23வது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குஜராத்தில் நடந்த உண்மையான சம்பவத்தை மையப்படுத்தி பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது என தகவல் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஸ்ரீ காகுலம் கிராமத்தில் உள்ள மீனவர் குடும்பத்தை நாக சைதன்யா மற்றும் படக்குழுவினர்கள் சந்தித்து அவர்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!