
உம்மன் சாண்டியின் மறைவு எனக்கு பெர்சனல் இழப்பு ; சோகத்தில் குஞ்சாக்கோ போபன்
இந்த நிலையில் தற்போது உம்மன் சாண்டியின் மறைவு குறித்து குஞ்சாக்கோ போபன் கூறும்போது, "அவரது மறைவு எனக்கு பெர்சனல் ஆக மிகப்பெரிய இழப்பு" என்று கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “நான் இங்கே அவரது உடலை பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்றால் அவருடன் எனக்கு நீண்ட காலமாக பழக்கம் இருந்து வருகிறது. அவருடைய குடும்பத்தில் ஒருவனாகவே நான் பழகி வந்திருக்கிறேன். என்னுடைய வீட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் அவர் தவறாமல் கலந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல அவரது வீட்டிற்கு எந்த நேரத்திலும் நான் வந்து செல்லும் சுதந்திரத்தையும் அளித்திருந்தார்.
நான் பார்த்த எளிமையான மக்கள் தலைவர்களில் முதன்மையானவர் உம்மன் சாண்டி. ஒருநாள் நள்ளிரவு அவரது வீட்டிற்கு சென்றபோது கூட மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கோப்புகளை பார்வையிட்டுக் கொண்டும் அருகில் இருந்த அதிகாரிகளிடம் பேசிக்கொண்டும் இருந்தார். அப்படிப்பட்டவரின் இழப்பு எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை பேரிழப்பு தான்” என்று தனது சோகத்தை வெளிப்படுத்தினார் குஞ்சாக்கோ கோபன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!