
ஆங்கில உளவாளியாக நடிக்கும் என்டிஆர் பேரன்
ஜூலை 08, 2023
Advertisement
"அமிகோஸ்" படத்தின் வெற்றிக்கு பிறகு என்.டி.ராமராவ் பேரன் நந்தமுரி கல்யாண் ராம் நடிக்கும் புதிய படத்திற்கு "டெவில்" என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நவீன் மேதாராம் இயக்கத்தில் தயாராகும் படத்தில் சம்யுக்தா மேனன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீகாந்த் எழுதியிருக்க, எஸ்.சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். அபிஷேக் பிக்சர்ஸ் சார்பில் அபிஷேக் நாமா தயாரிக்கிறார். இந்த படம் பீரியட் படமாக உருவாகிறது. இதில் நந்தமுரி கல்யாண்ராம் ஆங்கில அரசின் உளவாளியாக நடிக்கிறார். தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!