
பிரிவு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பவன் கல்யாண்
இதனிடையே, பவன் கல்யாணின் அண்ணன் நாகபாபுவின் மகன் வருண்தேஜ் திருமண நிச்சயதார்த்தத்திலும், மூத்த அண்ணன் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிலும் பவன் கல்யாணின் மனைவி ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அன்னா லெஸ்னவா கலந்து கொள்ளவில்லை. அதை வைத்து பவன் கல்யாணும், அன்னாவும் பிரிந்துவிட்டதாக டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது.
அந்த வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவிட்டுள்ளது. பவன் கல்யாண் "வராஹி விஜய யாத்ரா"வை வெற்றிகரமாக முடித்ததை முன்னிட்டு நடந்த பூஜையில் பவன் கல்யாண், அவரது மனைவி அன்னா கொன்னிடலா ஆகியோர் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அதன் மூலம் பவன் கல்யாண் தனது மூன்றாவது மனைவி அன்னாவை பிரிந்தார் என்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!