
படப்பிடிப்பில் ஜீப் விபத்தில் இருந்து தப்பிய அய்யப்பனும் கோஷியும் நடிகை
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஜீப் ஒன்றில் கவுரி நந்தா பயணிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஜீப்பை ஓட்டிய நடிகரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகில் இருந்த மின்சார கம்பத்தின் மீது மோதியது. நல்ல வேலையாக அதில் பயணித்த கவுரி நந்தா உட்பட நால்வரும் உடனடியாக வண்டியை விட்டு இறங்கி விட்டனர். ஜீப் மெதுவான வேகத்தில் சென்றதால் பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தன்னிடம் விசாரித்த அனைவருக்கும் தன்னுடைய நன்றியையும் தெரிவித்துள்ளார் கவுரி நந்தா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!