
மலையாள கமெடி நடிகர் கொல்லம் சுதி சாலை விபத்தில் மரணம்
நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் திரிச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம் அருகே, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்றில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுதி உயிழந்தார். சுதிக்கு வயது 39. சுதியின் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!